Saturday, December 4, 2010

சில கவிதைகள் - பத்மநாபபுரம் அரவிந்தன்

மருத நிலம் ( மலையும் மலை சார்ந்த இடமும் )

பத்மநாபபுரம் அரவிந்தன்   

வெள்ளையனின் துப்பாக்கி துடைத்து 
எழுதி வாங்கிய சொத்தும் ... மன்னனின்
கால் பிடித்துவாள் துடைத்து  சேர்த்து வைத்த   சொத்தும்...
மொத்தமாய் பறிபோனது ... உழைக்காமல் 
சேர்த்தது உதவாமல் போனது ...காட்டிக் கொடுத்து
 வந்தது காணாமல்ப்  போனது ....  

இதுஇது அவரின் சொத்தாக இருந்ததென்று
நீட்டி முழக்கி  இன்றைக்கும்  சொல்லித் திரியும் 
தலைமுறையை   என்னவென்று சொல்வது ?

வாள் பிடித்து களம் சென்று வென்று வந்த
சொத்தென்றால்  சொல்லலாம் பெருமையாக 
வாள் துடைத்து  வந்ததையும்... வந்த  வழிப் போனதையும் 
சொல்லித் திரிவதிலே பயன் என்ன  பேரர்களே  ?   



தலைமுறை  நிகழ்வுகள் 

                                      - பத்மநாபபுரம் அரவிந்தன் -


மருதநாயகம் பிள்ளை சிவன் பிள்ளையைப்   
பெற்றார் ...
சிவன் பிள்ளை  மருதநாயகம் பிள்ளையைப்  
பெற்றார் ...
மருதநாயகம் பிள்ளை சிவன் பிள்ளையைப்   
பெற்றார் ...
சிவன் பிள்ளை  ஆஷிஷ் வித்யார்த்தியைப்  
பெற்றான் .... 
ஆஷிஷ் வித்யார்த்தி அனுப் ராகுலைப்  
பெற்றான் .... 
அனுப் ராகுல் அஷரப் கானைப்  பெற்றான் .... 
அஷரப் கான் அலெக்ஸாண்டரைப் பெற்றான் .... 
அலெக்ஸாண்டர் ..ரோகன் கொன்சால்வசைப்  
பெற்றான் .... 

ரோகன் கொன்சால்வஸ் யாரைப்
பெறுவானோ?
மருதநாயகம் பிள்ளையும்,சிவன் பிள்ளையும்
எங்கே போயினரோ ???

  

No comments:

Post a Comment