Sunday, September 8, 2013

பேரின்பம் 

- பத்மநாபபுரம் அரவிந்தன்-

குழந்தை தூங்கும்வரை

மவுனத்தைக் கட்டிக் கிடக்கும்

இருவரின் விரகமும்

ரகசியப் பேச்சும்..

மெல்லிய வெளிச்சத்தில்

கண்கள் மின்னி காமம் கொதிக்கும்

தூங்கியக் குழந்தையை

மெல்ல நகர்த்தி

உருளாமல் இருக்க

தலையணை வைத்து

மெதுவாய் வந்து அருகில் அணைக்க..

அடடா.. அதுதான் பேரின்பமே

Saturday, September 7, 2013

சிங்கம் குகைக்குள் படுத்திருக்கிறது

                                                                                         - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

வேட்டையாடும் விதத்தில் 

நவீனம் காட்டித் துரத்தி 

விரட்டி வேட்டையாடி 

இரையைப் பகிர்ந்தளித்து 

மகிழ்ந்திருந்த சிங்கமது தனது தளங்களையும்,

களங்களையும் விரிவாக்கி 

வீற்றிருக்க..,  முறையற்ற முறைகளில்

 முயல்கள் கூட

 வேட்டையாடக் களமிறங்க.. 

சிந்தனையில் ஆழ்ந்தது சிங்கம்..

ஒரு சுப்ரபாதத்தில் 

தன் நிலை சொல்லி குகைக்குள் படுத்தது

'இனி நான் வேட்டையாட மாட்டேனென்று'

 மனதுள் சபதித்து 

வேடிக்கை பார்த்தபடி குகைக்குள்ளே கிடக்கிறது ...

காட்டு விலங்கெல்லாம் 

சிங்கமாக முடியவில்லை

கூடிக் கூடியவை பேசும் போது

 சொல்லிக் கொள்கின்றன தங்களுக்குள், 

வேட்டையே ஆடவில்லையானாலும்

சிங்கத்தின் வேட்டைமுறை ஒன்றுக்கும் அமையவில்லை

குகைக்குள்ளே இருந்தாலும் 

அதன் கம்பீரம் போகவில்லை' 

 

மெய்க் கீர்த்தி 
                              - பத்மநாபபுரம் அரவிந்தன் - 

மரங்கள் கூட அசயாத 

வன்னிருட்டில் அவன் நடக்க, நடக்க 

இருள் பழகி பாதை தெரிந்தது..

விடியலின் போதவன் போகும்

 ஊர் போய் சேர்ந்திருந்தான்.

வரயவே வராது என்றிருந்தவன் 

வரைந்து பார்ப்போமே என 

வரைந்த ஓவியங்கள் 

பெருந்தொகைக்கு விலை போயின..

முயன்று பார்க்கலாமென அவன் 

முழு மூச்சாய் முயன்றவை முழுவதையும்

வென்றெடுத்தான்...

போதுமென்ற நிறைவோடு

ஓய்ந்திருக்க 

என்ணியவன் ஒதுங்கி இருக்கயிலே 

மரணம் அவனை ஆரத் தழுவியது                                  ( vallamai - July )