Thursday, July 5, 2012


நினைவுகள்



பத்மநாபபுரம் அரவிந்தன்
திடீரென்று சம்மந்தமே இல்லாத 
பொழுதொன்றில் உன் நினைவுகள் 
எழுந்து விரிகிறது மனதில்
இப்பொழுது நீ எங்கிருக்கிறாய்… 
எப்படி இருக்கிறாய் எதுவுமே 
தெரியாத போதிலும் ..
கற்பனையில் 
துல்லியமாய்த் தெரிகிறாய் 
அதே சிரிப்பு.. நிஜத்தில் ஒரு வேளைமாறியிருக்கலாம்
ஆனால் என் மனதினுள் அப்படியே 
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த உன் 
முகமும், பேச்சும், சிரிப்பும் சற்றும் மாறாமல் பளீரிடுகிறது .
..
கல்லூரி வளாகத்தில் முந்திரி மரத்தில் சாய்ந்து
என் விரல்களைக் கோர்த்தபடி 
நீ சொன்ன வார்த்தைகள் இத்தனை
ஆண்டுகளுக்குப் பிறகும் ஏன் வந்தது என் நினைவில் மீண்டும்?
விரக்தி நேர்கையில் சுகங்களாய்க் 
கழிந்த பொழுதுகளை மீண்டும் 
மீட்டெடுக்கத் துடிக்கிறதோ மனம் ?
எங்கிருந்தாலும் என்னைப்போல் 
உனக்கும் என்றாவது தோன்றுமோ 
நாம் தவறவிட்ட வாழ்வின் சுகமான 
பொழுதுகளை நினைக்க……
 படத்திற்கு நன்றி:
பத்மநாபபுரம் அரவிந்தன்
பத்மநாபபுரம் அரவிந்தன்
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். கடல் வானொலி அதிகாரியாக (Marine Radio Officer) பணி புரிந்துகொண்டிருக்கிறார்.. கணையாழி, படித்துறை, திண்ணை, ஆனந்த விகடன், போன்ற இதழ்களில் இவருடைய குறு நாவல், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளது. கணையாழி இதழில் ஆழித் துரும்புகள் என்ற தலைப்பில் தன் கடல் அனுபவங்களைத் தொடராக வழங்கியுள்ளார்.