Sunday, October 24, 2010

அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்,
பதிநான்கு வருடங்களாக கடலில் பணி புரியும் எனக்கு கடல், வானம், நிலா, விண்மீன்கள், சூரியன், காற்று என சகலமும் மெல்ல மெல்ல பிடிக்க ஆரம்பித்து இப்பொழுது அவற்றை விட்டு விலகவே முடியாத ஒரு பெரும் பிடிப்பு ஏற்பட்டு விட்டது. 
கடலோடும், வானோடும் ஒப்பிட்டுப் பார்க்க, மற்றவை அனைத்தும் ஒன்றும் இல்லை என்றெனக்குப் படுகிறது.. கடலோடு நான் கொண்ட உறவும், சந்தித்த சில சம்பவங்களும் 'கணையாழி' இதழில் ஆழித் துரும்புகள் என்ற தலைப்பில் தொடராக வந்து பாதியில் நின்றது.  படித்துறை  இதழில்   
' அலைகளுக்கு அப்பால்' என்ற குறு நாவலும் என் கடலோடிய அனுபவத்தை அடிப்படையாக   கொண்டு   எழுதப் பட்டவை.   
இன்னமும் எழுத ஏராளம் உள்ளது.. எழுதுவேன்.. 
சுற்றி சுழன்றடிக்கும்  சூறாவளி
மனதுள் உருவெடுத்து நாளாயிற்று...
கடல் மணம் சுவாசத்தில் புகுந்து 
உதிரம் கலக்கும் சுகம் ... விரிந்து கிடக்கும் வானம்,
தொடுவானம் தொட்டு கண்ணெட்டும் தூரம்வரை 
நீலவான் ..ஆழ்  நீலப் பெருங்கடல் ..
உதிர நிறம் சிவப்பிலிருந்து நீலமாய்
மாறினால் நானும் கடலின் மைந்தன் ஆவேன் ..
பத்மநாபபுரம் அரவிந்தன்    

1 comment:

  1. Hi,

    Happy to see your writings again. All the best for all your writings and kavithaikals.

    Shivakumari Aravindh.

    ReplyDelete